பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் பாலாஜி செய்த நில மோசடி விவகாரத்திலிருந்து, போலிப் பட்டா பத்திரப்பதிவு மோசடியில் எம்.ஜி.ஆர். உயிலையே மாற்றி யமைத்த விவகாரம் வரை, அனைத்தையும் ஜெயக்குமார் எனும் ஒற்றை மனிதனே 23 வருடங்களாக எப்படி செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரித்ததில், பல அதிகாரிகளைக் கைக்குள் போட்டு காரியம் சாதித்தது வெட்டவெளிச்சமானது. சைதாப்பேட்டை சப்-ரிஜிஸ்ட்ரர் ஜாயின்ட் 2-வில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் மரகதம். இவர் மாற்றுத் திறனாளி என்பதால் தனது பணிகளுக்கு உதவியாக ஜெயக்குமாரை பணியில் சேர்த்திருந்தார். அதன்பிறகு பத்திரப் பதிவுத்துறையில் அனைத்து வேலைகளையும் பழகிக்கொண்ட ஜெயக்குமார், சில பல திரை மறைவான வேலைகளை உயரதிகாரிகளுக்கு செய்து கொடுத்து, தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி பயணிக்கத் தொடங்கினார்.

Advertisment

rr

தனது உறவினர் மூலமாக 2000-மாவது ஆண்டில் பணியில் சேர்ந்தவர், 2015-க்குள் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தையே தன் கட்டுக்கோப்பில் கொண்டுவந்தார். இப்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் விலைமதிக்க முடியாத பல கோடி மதிப்பிலான அரசு ஆவணங்களை சேதப்படுத்தினார் (ற்ஹம்ல்ங்ழ்ண்ய்ஞ் ர்ச் ழ்ங்ஸ்ரீர்ழ்க்ள்). அதேபோல், பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருகின்ற பொதுமக்களிடம், ஒவ்வொரு பணிக்கும் உயரதிகாரியின் பெயரைச்சொல்லி லஞ்சம் கேட்பது, வழிகாட்டி பதிவேட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, குறைந்த விலையுள்ள இடத்திற்கு அதிக விலை நிர்ணயித்து விற்பது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஜெயக்குமாரின் மீது மாவட்ட பதிவாளர் மற்றும் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு சென்றுள்ளது.

இதன்மூலமாக அப்போது டி.ஐ.ஜி.யாக இருந்த சுதா மல்யா, 2016ஆம் ஆண்டு திடீர் ரெய்டு மேற்கொண்டார். அப்போது பதிவுத்துறை அலுவலகத்தில் ஜெயக்குமார் சில ஆவணங்களை எடுக்கும்போது கையும்களவுமாகப் பிடிபட்டார். உடனே அப்போதிருந்த உதவியாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றத்தை செய்தவரான ஜெயக்குமார் தப்பவைக்கப்பட்டார். அதுமட்டுமா, அப்போது நடவடிக்கை எடுத்த நேர்மையான டி.ஐ.ஜி. சுதா மல்யாவை பணியிட மாற்றம் செய்தனர். அதன்பிறகு அந்த இடத்திற்கு வாசுகி என்பவரை அரசாங்கம் நியமித்தது. ஒரு வருட காலம் பணிபுரிந்த வாசுகியும் இவர்களுக்கு தோதான நபராக இல்லாத காரணத்தால் மாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு ஜனார்த்தனன் என்பவரை நியமித்தனர்.

Advertisment

இப்படி ஜெயக்குமார் மீது பல்வேறு புகார்கள் வந்த சூழ்நிலையில், 2017ஆம் ஆண்டு, மாவட்ட பதிவாளராக பணிபுரிந்த கீதா, மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் டேட்டா பணியாளராக ஜெயக்குமாரை நியமித்தார். பணியில் சேர்ந்த பிறகு இவருக்கென்று தனி லாகின் ஐ.டி. கிரியேட் செய்து கொடுக்கப்பட்டது. தன்னுடைய ஐ.டி.யைத் தவிர மற்ற அதிகாரிகளின் ஐ.டி.க்களை ஓப்பன் செய்து போலி டாக்குமெண்ட்களை உருவாக்கி பூந்து விளையாடியுள்ளார். மீண்டும் 2020ஆம் ஆண்டு, அடையார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார், 4 நாட்கள் மட்டுமே அங்கு பணிபுந்துவிட்டு, பணியே வேண்டாமென எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் உமா மற்றும் மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் மற் றும் டி.ஐ.ஜி. ஜனார்த்தனம் மூன்று பேரின் ஆதர வோடு, 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் பதிவுத்துறைக்கு யாரும் வாராத சூழலில் போலி டாக்கு மெண்ட் மூலம் அரசு இடங்களை அதிகமாக மாற்றியுள்ளாராம்.

rrrr

2021ஆம் ஆண்டு, ரவீந்திர நாத் இருந்த சீட்டில் மீனாகுமாரி வந்ததும் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் ஆட்களான சம்பத், சுதாகர், லோகேஸ் ஆகிய மூவரும் சேர்ந்துகொண்டு, கார்த்திகை தீபம் அன்று பணத்தை இவர்களே அவரது அறையில் வைத்து விட்டு, விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் மாட்டி விட்டனர். அதையடுத்து அந்த இடத்திற்கு சத்தியபிரியாவை நியமித்தனர். பின்னர் வந்த சார்பதிவாளர் சுஜாதா, ஜெயக்குமார் செய்த போலி பட்டா, டாக்குமெண்ட் போர்ஜரி உள்ளிட்ட பல்வேறு பித்தலாட்டங்கள் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தும் ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்காமல் உண்மையைக் கண்டறிந்த அதிகாரியைத் தான் தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இப்படி 2000 இருந்து 2023 வரையிலும் ஜெயக்குமார் செய்துள்ள பித்தலாட் டங்கள் குறித்து, தனி சிறப்புக் குழு அமைத்து, என்னென்ன ஆவணங்கள் முன்பு இருந்தது, இப் போது எந்தெந்த ஆவணங்கள் இல்லை போன்ற விவரத்தைக் கண்டறிந்து, பின்னர், ஐ.ஜி., டி.ஐ.ஜி. அலுவலகத்திலுள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து, ஆவணங்களை யார் எடுத்தது என்பது குறித்து அறிந்து, தீவிர விசாரணை நடத்தினால், மேலிருந்து அடிமட்ட அதிகாரிகள் வரையிலும் சிக்குவார்கள் என்கிறார்கள் பதிவுத்துறை அதிகாரிகள். இது குறித்து ஐ.ஜி. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அவர்களிடம் கேட்ட போது, "இது தொடர்பான விபரங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நடவடிக்கை எடுப் பார்களா?